பொழுதுபோக்கு
பறிபோன பாக்யா ரெஸ்டாரண்ட்: சம்பந்திக்கு சவால் விடுவாரா? பாக்கியலட்சுமி அப்டேட்!

பறிபோன பாக்யா ரெஸ்டாரண்ட்: சம்பந்திக்கு சவால் விடுவாரா? பாக்கியலட்சுமி அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில், முக்கிய சீரியல்களில் ஒன்றாக வலம் வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ள எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாக்யா கஷ்டப்பட்டு உருவாக்கிய ரெஸ்டாரண்ட் பறிபோயுள்ளது.விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியில், 3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, தனது மனைவி பாக்யாவை விவாரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். கணவன் போன பிறகு, தனது வாழ்க்கையை முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, ஒரு ரெஸ்டாரண்டடை திறந்தார் பாக்யா.இதனிடையே ராதிகாவை விவாகரத்து செய்த கோபி, பாக்யா வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது கடந்த சில வாரங்களாக இனியாவின் திருமணம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது. இனியா செல்வின் மகன் ஆகாஷை காதலிப்பது தெரிந்து கோபி, கோபப்பட் அந்த நேரத்தில் பாக்யாவின் ரெஸ்டாரண்டை விலைக்கு கேட்டு ஒரு பணக்காரர் வர, அவருக்கு ரெஸ்டாரண்டை விற்கும் எண்ணம் இல்லை என்று சொல்லிவிடுகிறாள்.அந்த ரெஸ்டாரண்டை எப்படியாவது வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் அந்த பணக்காரர், இனியாவை தனது மகனுக்கு பெண் கேட்டு, கோபியை அனுக, பெரிய இடத்து சம்பந்தம் என்று ஈஸ்வரி கோபி செழியன் 3பேரும், இனியாவுக்கு அந்த மாப்பிள்ளையை பேசி முடித்துவிடுகின்றனர். இந்த சமயத்தில் இனியாவுக்கு சீதனமாக ரெஸ்டாரண்டை எழுதி கேட்கிறார் அந்த பணக்காரர். அதற்கு பாக்யா மறுக்க, வீட்டில் இருப்பவர்கள் அவரை கட்டாயப்படுத்துகின்றனர்.இதனிடையே அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், ரெஸ்டாரண்டின் பெயரை மாற்றுவதற்கு மட்டும் பாக்யா அனுமதி கொடுத்து பத்திரம் எழுதி கொடுத்தபோதும், அந்த பணக்காரர், ரெஸ்டாரண்டை அவர் நிறுவனத்தின் பெயரில் எழுதிக்கொண்டதாகவும, இதற்கு மேல் பாக்யாவுக்கும் இந்த ரெஸ்டாரண்ட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட பாக்யா அதிர்ச்சியாகிறார் அதன்பிறகு வீ்ட்டில் வந்து அனைவரிடமும் இதை சொல்ல, பாக்யா இந்த ரெஸ்டாரண்டை மீட்பாரா என்ற கேள்வியுடன் ப்ரமோ முடிவடைகிறது.