பொழுதுபோக்கு
பாட்டுக்கு தனி ப்ளேலிஸ்ட்: வைரலாகும் கிஸ்ஸிங் போட்டோ: மூத்த நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா துருவ் விக்ரம்?

பாட்டுக்கு தனி ப்ளேலிஸ்ட்: வைரலாகும் கிஸ்ஸிங் போட்டோ: மூத்த நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா துருவ் விக்ரம்?
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி, தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில், பைசன் படத்தில் நடித்து வரும் நடிகர் துருவ் விக்ரம் தன்னை விட 2 வயது மூத்த நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விக்கரம். இவரது மகன் துருவ். அர்ஜூன் வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து தனது அப்பா விக்ரமுடன் இணைந்து, மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனிடையே தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுபமா பரமேஸ்வரன், ராஷிஷா விஜயன், லால் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இதனிடையே இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், ப்ளூமூன் என்ற பெயரில் பாடல் கேட்கும் ஸ்பாட்டிஃபை என்ற ஆப்பில் ஒரு ப்ளே லிஸ்டை உருவாக்கி வைத்துள்ளார். இதில், இருவர் முத்தம் கொடுத்துக்கொள்வது போன்ற புகைப்படமும் இணைந்துள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பது, துருவ் அனுபமா இருவரும் தான் என்று வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோவை ரெட்டிட் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர்.இந்த ப்ளேலிஸ் பலரின் விருப்பமான ப்ளேலவிஸ்டாக மாறிய நிலையில், துருவ் – அனுபமா இருவரும் சேர்த்து கேட்கும் வகையில் இந்த ப்ளேலிஸ் அமைக்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 27 வயதான துருவ் விக்ரம் 29 வயதான அனுபமாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக வெளியாகியுள்ள இந்த தகவல்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சினிமாவில் இணைந்து நடித்து வரும் பல நடிகர் நடிகைகள் குறித்து இப்படியான வதந்திகள் பரவுவது சாதாரனமாக நடக்கும் நிகழ்வு.அதேபோல் இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இதனால் இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்ற கேள்விகளும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.