Connect with us

உலகம்

அமெரிக்காவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

Published

on

Loading

அமெரிக்காவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களுடைய விவரங்களை உள்துறை பாதுகாப்பு அரச அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லையாயின் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உள்துறை பாதுகாப்பு அரச அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படவில்லையாயின் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனவும் அவ்வாறு தங்கியிருப்பவர்கள் தாமாக வெளியேறினால் பாதுகாப்பானது. நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும். நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ள முடியும். நாங்களாகவே வெளியேற்றாமல் நீங்களாகவே வெளியேறினால் எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவுக்கு வர முடியும். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.

இந்த முடிவு அமெரிக்காவில் எச்.1-பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது. எச்-1 பி. விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்திருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன