பொழுதுபோக்கு
கல்யாணத்தை நிறுத்த வரும் கௌதமி: இவர் நல்லவரா? கெட்டவரா? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

கல்யாணத்தை நிறுத்த வரும் கௌதமி: இவர் நல்லவரா? கெட்டவரா? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த கௌதமி, தற்போது நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் அவ்வப்போது சின்னத்திரை சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார், அந்த வகையில் தற்போது ஒரு புதிய சீரியிலில் கமிட் ஆகியுள்ளார்.ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌதமி. அதன்பிறகு, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள கௌதமி, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.2006-ம் ஆண்டு வெளியான சாசனம் படத்தில் நடித்திருந்த கௌதமி அதன்பிறகு, 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் நடிக்காத கௌதமி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு சிம்பா, மிஸ்டர் பச்சன், 35 என 3 தெலுங்கு படங்களில் நடித்திருந்த கௌதமி, வெப் சிரீஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.அவ்வப்போது சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வரும் கௌதமி, நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த வகையில் மற்றொரு ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மனசெல்லாம் சீரியலில் கௌதமி கெஸ்ட் கேரக்டரில் நடிக்க உள்ளார். இது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. கல்யாணத்தை நிறுத்த வானதி திட்டம் தீட்ட, அந்த திட்டத்திற்கு சித்ராவாக வரும் கௌதமி ஹெல்ப் செய்வது போன்று ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது.A post shared by zeetamil (@zeetamizh)இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் மனசெல்லாம் சீரியல் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.