இலங்கை
தேர்தல் விதிமுறைகளை மீறி வரும் NPP அரசாங்கம் ; எம்.ஏ.சுமந்திரன்

தேர்தல் விதிமுறைகளை மீறி வரும் NPP அரசாங்கம் ; எம்.ஏ.சுமந்திரன்
ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாகப் பிரசாரம் செய்யும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படையாகத் தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் வடமராட்சி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இருந்த ஆட்சியாளர்கள் செய்யாத நெறிமுறை மீறல்களையும் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வருவதை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.