Connect with us

இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி: மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது; இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை

Published

on

Mehul Choksi

Loading

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி: மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது; இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கடன் மோசடி வழக்கில், தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மற்றும் அமலாக்க இயக்குநரகத்தால் தேடப்பட்டு வந்த நிலையில், அவரை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்ததை அடுத்து, பெல்ஜியத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வதிவிட அட்டையைப் பெற்ற பிறகு சோக்ஸி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் வசித்து வருகிறார்.ஆங்கிலத்தில் படிக்க: PNB loan fraud: Mehul Choksi detained in Belgium on India’s extradition request2025-ம் ஆண்டின் தொடக்கத்தில், சிபிஐ வெளியுறவு அமைச்சகம் மூலம் பெல்ஜிய அதிகாரிகளிடம் மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தது. அதன்படி நேற்று முன்தினம் (ஏபரல் 12) அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அனைத்து நடைமுறை மற்றும் ஆவணப் பணிகளையும் முடிக்க சிபிஐயின் மூத்த அதிகாரிகள் குழு பெல்ஜியத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது,இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்திற்குச் செல்வதற்கு முன்பு ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது. அவரது மனைவி பிரீத்தி ஒரு பெல்ஜிய குடிமகள் என்று அறியப்படுகிறது. சோக்ஸி தற்போது தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் (FEO) சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார், இந்த சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்குவதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்யலாம்.கடந்த ஆண்டு, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், தலைமறைவான சோக்ஸி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிலிருந்து தப்பி ஓடுவதற்கான திட்டத்தை வகுத்ததாகவும், நவம்பர் 2017 இல் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் குடியுரிமையைப் பெற்றதாகவும், இந்த வழக்கில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜனவரி 2, 2018 அன்று சோக்ஸி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இருப்பினும், தனது சட்ட ஆலோசகர்கள் மூலம் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சோக்ஸி தன் மீதான குற்றங்களுக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார். மும்பையில் உள்ள பிராடி ஹவுஸ் பி.என்.பி கிளையில் நடந்ததாகக் கூறப்படும் கடன் மோசடியைச் செய்ததாக சோக்ஸி, அவரது மருமகன், தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் மீது 2018 இல் அமலாக்கத்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தன.சோக்ஸி, அவரது நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மற்றும் பலர், சில வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், உறுதிமொழி கடிதங்களை (LoU) மோசடியாகப் பெற்று, வெளிநாட்டு கடன் கடிதங்களை (FLC) மேம்படுத்தி, பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. சோக்ஸி மீது நிறுவனம் இதுவரை மூன்று குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிரவ் மோடி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டு லண்டன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர், லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன