
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 15/04/2025 | Edited on 15/04/2025

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி 2019ஆம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்ப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “உலக வரலாற்றையே மாற்றி எழுதக் கூடிய விஷயம் நடந்திருக்கிறது. இரும்பு நாகரிகம் தொடங்கியது அனடோமியாவில் இருந்து என சொல்வது பொது வரலாறு. இதுவரை அப்படித்தான் உலகம் நமக்கு சொல்லி கொடுத்திருக்கு. ஆனால் தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட்டது என நம் தமிழக அரசு அறிவித்தது. அதை எதன் அடிப்படையில் அறிவித்தார்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு என்னென்ன என்பதை விரிவாக இந்த ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
இந்தியாவில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியை ஆவணப்படுத்தப்பட்ட முதல் ஆவணப்படம் இது தான். இந்த வருடத்துக்குள் இதனை முடித்துவிடுவோம். அடுத்த வருடம் வெளியிடுவோம். ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கும் அனுப்பவுள்ளோம்” என்றார்.