இலங்கை
ஏப்ரல் இறுதிவாரத்தில் பரப்புரை உச்சமாகும்!

ஏப்ரல் இறுதிவாரத்தில் பரப்புரை உச்சமாகும்!
மே தினத்தில் பலப்பரீட்சை
ஏப்ரல் மாதத்தின் இறுதிவாரத்தில், பிரதான கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் உச்சம்பெறும் என்றும், பேரணிகளும் பரப்புரைக் கூட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரியவருகின்றது.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, நாடெங்கும் தேர்தல் பரப்புரைகள் தற்போது தீவிரம் பெற்றுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களும், இதர கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கொழும்புக்கு வெளியில் தற்போது பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன. ஏப்ரல் இறுதி வாரத்தில் கொழும்பை மையப்படுத்தி அவர்களின் பரப்புரைகள் அமையவுள்ளன என்று தெரியவருகின்றது.
அதுபோல், ஏனைய கட்சிகளும் ஏப்ரல் மாத்தின் இறுதி வாரத்தில் உச்சக்கட்டப் பரப்புரைகளை முன்னெடுக்கத் தயாராகியுள்ளன. மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர்தினம் என்பதால், அதை மையப்படுத்திய பேரணிகளையும் முன்னெடுத்து பலம் காட்டுவதற்கு கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன என்றும் தெரியவருகின்றது.
மே மாதம் மூன்றாம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் முற்றாக நிறைவுக்கு வரவுள்ளன. ஆதலால், தொழிலாளர் தினமே இம்முறை உள்ளூராட்சித் தேர்தலின் இறுதிப் பரப்புரைப் புள்ளியாக அமையும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.