இலங்கை
தமிழர் பகுதியில் நேர்திக்கடனை நிறைவேற்ற சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

தமிழர் பகுதியில் நேர்திக்கடனை நிறைவேற்ற சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14ஆம் திகதி நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் உள்ள கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இரு இளைஞர்கள் குறித்த ஆலய தூக்குகாவடி நேர்த்திகடனை நிறைவேற்ற குமுழமுனை கற்பக பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச் செல்ல இருந்த வேளை தூக்கு காவடி கட்டப்பட்ட உழவியந்திர பெட்டி திடீரென குடைசாய்ந்ததனால் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து தூக்கு காவடி எடுத்த இரு இளைஞர்களும் விபத்தில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.