இலங்கை
வடக்கில் இன்று அனல் அடிக்கும்!

வடக்கில் இன்று அனல் அடிக்கும்!
வடக்கு உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித உடலால் உணரப்படும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:
வடமாகாணம், வடமத்திய மாகாணம், மேல் மாகாணம், தென்மாகாணம், கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் வெப்பநிலை உச்சம்பெறும். குறிப்பாக, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
இதேவேளை, மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் ஆகியவற்றிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – என்றுள்ளது.