Connect with us

இலங்கை

வடக்கை தம்வசப்படுத்த தேசிய மக்கள் சக்தி முயல்கிறது – சுரேஸ் பிறேமச்சந்திரன்!

Published

on

Loading

வடக்கை தம்வசப்படுத்த தேசிய மக்கள் சக்தி முயல்கிறது – சுரேஸ் பிறேமச்சந்திரன்!

வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டு வருகின்றது. இவர்களது இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் அழமாக சிந்திக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;

Advertisement

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் அனைத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை நடைமுறைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

இதேநேரம் சொல்லளவில் அனைவரும் சமம் என கூறும் அநுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஜே.வி.பி. என்ற தோற்றத்தின்  உண்மையான இயல்பையே காட்டுகின்றது. இதை  இன்று நேரடியாகவே காணமுடிகின்றது.

இதேவேளை, ஏற்கனவே திறந்துவிடப்பட இருந்த வீதிகளையே இன்று போர் காலத்தில் இருந்ததைவிட மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் திறந்துவிட்டு வாக்குக்காக நாடகமாடுகின்றனர். இதேநேரம் இதுவரை எந்தவொரு ஊழலையோ முறைகேடுகளையோ கட்டுப்படுத்தவோ இல்லை. அதைவிட தேர்தல் கால நடைமுறை மீறல்களை தேர்தல் திணைக்களத்திடம் ஆதாரத்துடன் கூறிக்கூட கைது செய்யவில்லை. அத்துடன் உளூராட்சி மாற்றங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாணசபைக்கே உள்ளது. அது மத்திய அரசுக்கானதல்ல. மாகாண சபை என்பது பல இலட்சம் உயிர்களின் தியாகத்துக்கு கிடைத்த சில உரிமைகளுள் ஒன்று. இதை மீண்டும் மத்திக்கு கொடுத்தால் இருப்பதையும் இழக்கும் நிலை மறுபடியும் தமிழருக்கு ஏற்படும்.

Advertisement

இதனிடையே பொதுத்தேர்தலில் யாழ்பாணத்திலிருந்து மத்திக்கு 3 நாடளுமன்ற உறுப்பினர்களை கொடுத்ததால் தமிழ் மக்களின் அரசியல் விடையங்கள் தொடர்பில் தாங்களே தீர்மானிப்போம் என்ற மமதையுடன் இன்று பேசுகின்றனர் .

இவ்வாறான நிலையில் இப்போதுள்ள அரசியல் சாசனத்தில் இருக்கின்ற குழப்பங்களுக்கு தீர்வு காணவேண்டும் என கூறினார்கள், நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் சாசனம் அவசிம் தேவை என்றார்கள். ஆனால் அதற்கான பலமிருந்தும் அதை இவர்கள் கொண்டுவருவார்கள் என்பது சந்தேகம்.

இதேநேரம் சமஸ்டி எனக்கூறும் தமிழர் தரப்பிடமும் அதற்கான பொறிமுறை இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் மாகாணத்துக்கு இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரங்களை முழுமையாக நிறைவேற்றி அதன் பின்னர் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என கூறுகின்றோம். அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் எமக்கான வலுவான அதிகாரமாகும். இதை தமிழ் மக்கள் தமக்கானதாக உறுதி செய்வது அவசியம். இவ்வாறான பின்னணியில் ஜே.வி.பி.யின்  பித்தலாட்டம் மக்களுக்கு தெரியவந்துள்ளது.

Advertisement

இதேநேரம் கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கா அல்லது இலங்கைக்கா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக அமைச்சர் தரத்தில் சந்திரசேகரனின் சொற்பிரயோகங்கள் இருப்பது அவசியம். அவர் அதை நினைவில் கொள்ளாது செயற்படுவதும் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஒரு தரப்புக்கு ஒரு நியாயம் இன்னொரு தரப்புக்கு மற்றொரு நியயம் என தேர்தல் ஆணையகம் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன