தொழில்நுட்பம்
வெறும் ரூ.5000-க்கு அட்டகாசமான 32 இன்ச் ஸ்மார்ட் டிவி! – என்ன பிராண்ட்? எங்கு கிடைக்கிறது?

வெறும் ரூ.5000-க்கு அட்டகாசமான 32 இன்ச் ஸ்மார்ட் டிவி! – என்ன பிராண்ட்? எங்கு கிடைக்கிறது?
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த கோடை காலத்தில் வீட்டில் குழந்தைகளுடன் 32 இன்ச் பெரிய திரை அனுபவத்தை கண்டுரசிக்கலாம். நீங்கள் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால் இதுவே சரியான நேரமாகும். வெறும் 5,000 ரூபாய்க்கே 32 இன்ச் டிவி எப்படி கிடைக்கும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். எல்.ஜி. எல்.ஆர்.57 (LG LR57 (32 inch) 2025 Edition): இதன் விலை வெறும் ரூ .4990 மட்டுமே. ஆம்.. ஃபிளிப்கார்ட்டில் எல்.ஜி. எல்.ஆர்.57 (32 இன்ச்) ஹெச்டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி (2025) விற்பனை விலை ரூ.13,990-க்கு கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட் டிவியை எக்ஸ்சேஞ் செய்யும் பட்சத்தில் ரூ.5,650 வரை விற்பனை விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் எச்.டி.எப்.சி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ.1,750 கூடுதல் தள்ளுபடியையும், ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈ.எம்.ஐ செய்யும்போது ரூ.1,500 தள்ளுபடியையும் பெறுவீர்கள். இதனால், இதன் மதிப்பு ரூ.4,990 வரை செல்லும்.டிவியின் சிறப்பம்சங்கள் என்ன?எல்.ஜி. எல்.ஆர்.57 (32 இன்ச்) ஸ்மார்ட் டிவி (2025) ஹெச்.டி மற்றும் ஆக்டிவ் ஹெச்.டி.ஆர் வழங்குகிறது. இது WebOS-ல் இயக்கப்படுகிறது. Netflix, Prime Video மற்றும் YouTube போன்ற பிரபலமான ஓ.டி.டி. தளங்களும் உள்ளன. பயன்படுத்த எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் Wi-Fi, 2 HDMI மற்றும் 1 USB உடன் வருகிறது. மேம்பட்ட ஒலி அனுபவத்திற்காக 20W பவர் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.