சினிமா
அந்த மாதிரி படத்துல தான் நடிச்சேன்.. நான்தான் ராணி!! நடிகை ஷகீலா பளார்..

அந்த மாதிரி படத்துல தான் நடிச்சேன்.. நான்தான் ராணி!! நடிகை ஷகீலா பளார்..
தென்னிந்திய சினிமாவில் 18+ படங்களில் நடித்து அதன்பின் திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷகீலா அம்மா என்ற பெயரோடு இணையத்தில் பயணித்து வருகிறார்.பலருக்கும் உதவி வரும் நடிகை ஷகீலா, சமீபத்தில் தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க கேட்டபோது வேண்டாம் முடியாது என்று ஒதுக்கினேன் என்று கூறியிருந்தார்.இதுகுறித்து நெட்டிசன்கள் ஷகீலாவை கிண்டல் செய்து வந்த நிலையில், அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். உங்களுக்கு அறிவு இருக்கா, தீபிகா படுனோன் கேரக்டருக்கு கூப்பிட்டு இருப்பாங்களோ என்று கேட்கிறார்கள்.அப்படத்தில் சத்யராஜ், கோவை சரளா எல்லாம் நடித்திருக்கிறார்கள், அதில் ஒரு கேரக்டரில் நடிக்க கூப்பிட்டாங்க, அதற்கு எனக்கு ஆடிஷன் கொடுக்க பிடிக்கலன்னு சொன்னேன்.ஏன், உங்களுக்கு ஷாருக்கான் பெரிய ஆளா தெரியுது, உங்க ஊர் பொம்பள, அவர்கள் படத்தில் என் பேர் போடுவது உங்களுக்கு பெருமையாக இருக்காதா?. உன் பேரு போட்டா பிட்டு படம் வருதுன்னு சொல்றீங்க, ஆமா, நான் பிட்டு படம் நடித்தவள் தான் அதுல நான் தான் ராணி என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.