இலங்கை
இலங்கையின் மிக வயதான விலங்கிற்கு இன்று எண்ணெய் தேய்ப்பு

இலங்கையின் மிக வயதான விலங்கிற்கு இன்று எண்ணெய் தேய்ப்பு
சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வு இன்றைய தினத்தில் (16) நடைபெற்றது.
அந்த வகையில் மலர்ந்துள்ள வருடத்தில் சிறந்த ஆரோக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகத்தின்படி இடம்பெறும் இந்நிகழ்வு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலும் சுப நேரத்தில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வு ‘கடோல்’ எனும் யானைக்கு எண்ணெய் தேய்ப்பதிலிருந்து ஆரம்பமானது.
அதற்கமைய, இலங்கையில் வாழும் மிகவும் வயதான விலங்கான தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வாழும் 153 வயதுடைய இராட்சத ஆமையின் தலையிலும் வைபவ ரீதியாக எண்ணெய் தேய்க்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்ட கபில நிற கரடியின் தலையிலும் எண்ணெய் தேய்க்கப்பட்டது.
இந்நிகழ்வானது, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைய, பிரதி பணிப்பாளர் உட்பட மிருகக்காட்சிசாலையின் முகாமைத்துவ அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.