Connect with us

இலங்கை

சங்கடஹர சதுர்த்தியில் அதிர்ஷ்டம் பெருக விநாயகரை இப்படி வழிபடுங்க

Published

on

Loading

சங்கடஹர சதுர்த்தியில் அதிர்ஷ்டம் பெருக விநாயகரை இப்படி வழிபடுங்க

விநாயகப் பெருமானுக்கு உரிய மிக உயர்வான விரதம் சதுர்த்தி விரதமாகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். 

ஏப்ரல் 16, 2025 அன்று விகட சங்கஷ்டி சதுர்த்தி வருகிறது. ஏப்ரல் 16ம் திகதியன்று காலை 11.58 மணி துவங்கி, ஏப்ரல் 17 ம் திகதியன்று பகல் 01.24 வரை சதுர்த்தி திதி உள்ளது.

Advertisement

சதுர்த்தி வழிபாடு மாலை நேரத்திலேயே செய்யப்பட வேண்டும் என்பதால் ஏப்ரல் 16ம் திகதியையே சங்கடஹர சதுர்த்தியாக நினைத்து வழிபடுகிறோம்.

சங்கடஹர சதுர்த்தி அன்று பக்தர்கள் சூரிய உதயம் முதல் சந்திர உதயம் வரை விரதம் இருப்பார்கள். சிலர் முழு உபவாசமாக விரதம் இருப்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பால் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். பக்தர்கள் காலையில் விநாயகர் பூஜை செய்வார்கள்.

விநாயகர் படத்தை அலங்கரித்து பழங்கள், அருகம்புல், குங்குமம், மோதகம், தேங்காய் மற்றும் அட்சதை வைத்து வழிபடுவார்கள். விநாயகர் மந்திரங்கள் மற்றும் ஸ்துதி சொல்லி வழிபடுவது நல்லது.

Advertisement

சங்கடஹர சதுர்த்தியில் சந்திரனுக்கு முக்கியத்துவம் உண்டு. பக்தர்கள் சந்திரோதயத்திற்காக காத்திருப்பார்கள். சந்திரன் உதித்த பிறகு, சந்திரனுக்கு அர்க்யம் கொடுப்பார்கள். அதன் பிறகு விநாயகர் பூஜை செய்து விரதத்தை முடிப்பார்கள்.

முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் மாலை நேரத்தில் அருகம்புல் சாற்றி, விநாயகருக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி மனதார வழிபட்டாலும் அவர்களுக்கு விநாயகப் பெருமான் அருளை வழங்குவார் என்பது ஐதீகம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன