சினிமா
பணத்தைக் கொடுத்து விஜயாவை மயக்கப்பார்க்கும் ரோகிணி! சதித்திட்டத்தைக் கேலி பண்ணும்முத்து..!

பணத்தைக் கொடுத்து விஜயாவை மயக்கப்பார்க்கும் ரோகிணி! சதித்திட்டத்தைக் கேலி பண்ணும்முத்து..!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனான்ர அம்மா முத்துவுக்கு போன் எடுத்து என்னாச்சு என்று கேட்கச் சொல்லுறார். அதுக்கு மீனா நான் போன் பண்ணினான் அவர் எடுக்கிறார் இல்ல என்கிறார். மேலும் நீங்க பயப்படாமல் இருங்க என்று சீதாவைப் பாத்துச் சொல்லுறார். இதனை அடுத்து மீனாவோட அம்மா தன்ர பிள்ள பரீட்சை எழுதாட்டியும் பரவாயில்ல நல்ல படியா வீட்டுக்கு வந்தால் காணும் என்று சொல்லுறார்.இதனை அடுத்து முத்து மீனாவுக்கு போன் எடுத்து நீ டென்சன் ஆகாத சாத்தியா கிடைச்சிட்டான் என்று சொல்லுறார். அதைக் கேட்டு மீனா ரொம்பவே சந்தோசப்படுறார். மேலும் சத்தியாவுக்கு எதுவும் நடக்கல நல்லா இருக்கிறான் என்று முத்து சொல்லுறார். அதைத் தொடர்ந்து இதுக்கெல்லாம் காரணம் சிற்றி எண்றதைக் கேட்டவுடனே மீனா அவனைப் கோபத்துடன் பேசுறார்.இதனை அடுத்து முத்து அந்த ரவுடிகளை பொலிஸ் கைது பண்ணிக் கொண்டு போய் விட்டதாக மீனாவுக்குச் சொல்லுறார். பின் சத்தியா மீனாவிடம் தனக்கு எதுவும் இல்ல நீ பயப்பிடாத என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து முத்து சத்தியாவ பரீட்சை எழுதக் கூட்டிக் கொண்டு போறார். மேலும் ரோகிணி தான் மேக்கப் பண்ணி சம்பாதிச்சத விஜயாவுக்கு கொடுக்கிறார்.அதுக்கு விஜயா நீ பணத்தைக் கொடுத்தவுடன நான் மனசு மாறிடுவேன் என்று நினைக்கிறீயா என்று கேக்கிறார். அதனை அடுத்து மனோஜ் அந்தப் பணத்தை விஜயாவ வாங்கச் சொல்லிச் சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலை அந்தப் பணத்து மேல ஆசை இல்ல என்றால் அதை வாங்க வேண்டாம் என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து மீனாவைப் பாத்து ரோகிணி பணத்தைக் கொடுத்து அம்மாவை ஏமாத்தலாம் என்று நினைக்கிறாள் எனக் கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசொட்.