Connect with us

விளையாட்டு

மீண்டும் பேட் சோதனை… போட்டியை நிறுத்திய நடுவர்கள்; சிக்கிய கொல்கத்தா வீரர்கள்: PBKS vs KKR ஆட்டத்தில் என்ன நடந்தது?

Published

on

Andre Russell Sunil Narine and Anrich Nortje bats fail the gauge test PBKS vs KKR IPL 2025 Tamil News

Loading

மீண்டும் பேட் சோதனை… போட்டியை நிறுத்திய நடுவர்கள்; சிக்கிய கொல்கத்தா வீரர்கள்: PBKS vs KKR ஆட்டத்தில் என்ன நடந்தது?

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு முல்லன்பூரில் நடந்த 31-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஆங்கிலத்தில் படிக்கவும்: Andre Russell, Sunil Narine, and Anrich Nortje’s bats fail the gauge testமிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, 15.3-வது ஓவருக்குள்ளே அனைத்து விக்கெட்டையும் பறித்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 112 ரன்கள் கொண்ட எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அதிரடியாக ரன் எடுக்க தடுமாறியது. அதிகபட்சமாக  அங்க்கிரிஷ் ரகுவன்ஷி 37 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், கொல்கத்தா அணி 15.1-வது ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதையடுத்து, பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய அந்த அணியில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். பேட் சோதனை இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது கள நடுவர்கள் திடீரென கொல்கத்தா அணி வீரர்கள் பயன்படுத்திய பேட்டை சோதனை செய்தனர். குறிப்பாக, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரின் பேட்டை சோதனை போட்டனர். அந்த சோதனையில் அவர்களின் பேட் தோல்வியடைந்ததை அடுத்து வேறு பேட்டை மாற்றிக் கொள்ளுமாறு நடுவர்கள் தெரிவித்தனர். இதற்கான காரணம்,  வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம், நீளம், உள்ளிட்ட வடிவமைப்பு ஐ.பி.எல். விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சிறிய கையடக்க அளவுகோல் மூலம் சரிபார்த்தனர். இந்த விதிப்படி வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அளவு அகலம்: 4.25 அங்குலம் நீளம்: 2.64 அங்குலம் மற்றும் விளிம்புகள்: 1.56 அங்குலம் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய போட்டிகளில் நடுவர்கள் சோதனை மேற்கொண்டனர். அதன் காரணமாக அதிரடி வீரர்களான கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே பேட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. A post shared by Sankalpa Basnet (@sankalpa_basnet7)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன