Connect with us

உலகம்

சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை உயர்த்திய அமெரிக்கா!

Published

on

Loading

சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை உயர்த்திய அமெரிக்கா!

அமெரிக்கா-  சீனா இடையேயான வர்த்தகப்  போர் தீவிரமடைந்து வரும்  நிலையில்  சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

Advertisement

இதற்குப்  பதிலடி கொடுக்கும் வகையில் சீன இறக்குமதிக்கான வரியை 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்திக்கு அமெரிக்கா சீனாவையே அதிகம் சார்ந்துள்ளது.

இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்ததுள்ளதுடன் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையிலேயே சீன இறக்குமதிக்கான வரியை ஏற்கனவே விதித்த 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பு உலகரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தகக்து.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன