இந்தியா
ஜப்பானிய தூதரக அதிகாரி பாலியல் புகார்; டெல்லி ஜவகர்லால நேரு பல்கலைகழக பேராசிரியர் பணிநீக்கம்

ஜப்பானிய தூதரக அதிகாரி பாலியல் புகார்; டெல்லி ஜவகர்லால நேரு பல்கலைகழக பேராசிரியர் பணிநீக்கம்
ஜப்பானிய தூதரக அதிகாரி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) அதன் சர்வதேச ஆய்வுகள் பள்ளியிலிருந்து ஒரு பேராசிரியரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கடந்த ஏப்ரல் 16-ந் தேதி நடைபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு (ICC) நடத்திய விசாரணையின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி நீக்கம் செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: JNU sacks professor over sexual misconduct complaint by Japanese Embassy officialமாநாடுகளை ஒருங்கிணைக்க பேராசிரியருடன் “ஜப்பானிய அதிகாரி, தொடர்ந்து தொடர்பில் இருந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் உள் புகார் குழுவிடம் புகார் அளித்தார். இந்த புகாருடன் சேர்த்து இவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல்கள் தொடர்பான பதிவுகளை ஆதாரமாக சமர்ப்பித்தார்,” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். ஸ்வரன் சிங் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் மட்டுமே உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கவுன்சில் கூட்டம் மற்றும் பல்கலைகழக உள் புகார் குழு, பரிந்துரைகளின் அடிப்படையில் மற்ற மூன்று ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேருக்கு தலா 3 வருடம் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்து அபராதம் விதிக்கப்பட்டது, இந்த ஆசிரியர்கள், ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையம், இயற்பியல் அறிவியல் பள்ளி மற்றும் சமஸ்கிருத மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.இந்த முடிவுகள் ஊழல் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான நிர்வாகத்தின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பிரதிபலிக்கின்றன. முதல் முறையாக, மாணவர்களுக்கு பல்கலைகழகத்தின் உள்புகார் குழுவில், பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது, இது பல்கலைகழகத்தின் ஜனநாயக கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்,” என்று துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் பிரதிநிதிகள் இப்போது ஐ.சி.சி.க்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கவுன்சில் தீர்மானித்துள்ளது.பேராசிரியர் ஸ்வரன் சிங் சர்வதேச அரசியல், அமைப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு மையத்தின் (சி.ஐ.பி.ஓ.டி) ஒரு பகுதியாக இருந்தார். சி.ஐ.பி.ஓ.டி செயல்படும் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், “கடந்த ஆண்டு மே மாதத்தில்” இந்தப் புகார் குறித்து பல்கலைக்கழகத்திற்குத் தெரியவந்ததாகக் கூறினார். இது குறித்து பல்கலைகழகத்தின் உள்புகார் குழு, ஒரு விசாரணையை நடத்தியது, இதில், அவர் இணைப் பேராசிரியராக இருந்த காலத்தில், தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாகக் கண்டறியப்பட்டது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.இதே போன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சிங் பல்கலைகழகத்தின் இணைப் பேராசிரியர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் அவர் மீண்டும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்ததாக அறியப்படுகிறது. பல ஆண்டுகளாக சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 8 புகார்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளதாக பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கருத்து கோரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிலிருந்து வந்த அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு சிங் பதிலளிக்கவில்லை.மேலும் இது குறித்து, சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் டீன் அமிதாப் மட்டூ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். புகார் தொடர்பான மின்னஞ்சல் கேள்விகளுக்கு ஜப்பானிய தூதரகம் பதிலளிக்கவில்லை. சிங் சர்வதேச உறவுகளில் மூத்த அறிஞர், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சுமார் மூன்று தசாப்த கால அனுபவம் கொண்டவர். ஜேஎன்யு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், ஜேஎன்யுவில் சர்வதேச ஆய்வுகளில் எம்ஃபில் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.ஸ்வீடனில் உள்ள உப்சாலாவில் மோதல் தீர்வு குறித்த முதுகலை டிப்ளோமாவும் பெற்றுள்ளார். அவரது கல்வி கவனம் “ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு, மோதல் தீர்வு மற்றும் அமைதி ஆய்வுகள், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி கொள்கை, பன்முகத்தன்மை, ஆசிய விவகாரங்கள், சீனாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள்” உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது. சிங் தனது கல்வி வாழ்க்கையை புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் (ஐடிஎஸ்ஏ) தொடங்கினார், அங்கு அவர் 1992 முதல் 2001 வரை ஆராய்ச்சி ஆசிரியராக பணியாற்றினார்.இதனைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு ஜேஎன்யுவில் சர்வதேச ஆய்வுகள் பள்ளியில் ஆசிரிய உறுப்பினராக சேர்ந்தார். அவர் ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில், தலைமை கண்காணிப்பு அதிகாரி (2012-2014), பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியர் (2022-2023), மற்றும் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் ஆசியா ஃபெலோ (2001-2002) உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார், மேலும் புதுதில்லியில் உள்ள சென்டர் டி சயின்சஸ் ஹுமைன்ஸ் உடன் (2005-2008) சர்வதேச ஒத்துழைப்புகளைக் கொண்டிருந்தார்மேலும், ஆசிய ஆய்வுகள் சங்கத்தின் தலைவராகவும், ஆசிய மற்றும் பசிபிக் ஆய்வுகள் இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். சிங்கின் வெளியீடுகளில் “சைபர் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தோ-அமெரிக்க ஒத்துழைப்பு: சவால்கள், வரம்புகள்” “கோவிட்-19 மற்றும் இந்தியா-சீனா சமன்பாடுகள்: இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அவற்றின் இடைமுகத்தை ஆராய்தல்” பற்றிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் பல கட்டுரைகளை எழுதியுள்ளார் அவரது சமீபத்திய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களில் “இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியா மற்றும் ஆசியான்”, “காலநிலை மாற்றத்தின் அரசியல்” மற்றும் “சீனா மற்றும் இந்தோ-பசிபிக்” ஆகியவை அடங்கும்.