விளையாட்டு
RCB vs PBKS LIVE Score: 5-வது வெற்றி யாருக்கு? பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

RCB vs PBKS LIVE Score: 5-வது வெற்றி யாருக்கு? பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 34-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில், 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், பஞ்சாப் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 5-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. நேருக்கு நேர் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடந்த ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக மோதிய 2 ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.