சினிமா
என்னைப் பற்றித் தவறாகப் பேசாதீங்க..!நடிகை ரம்யா பாண்டியன் ஓபன்டாக்..!

என்னைப் பற்றித் தவறாகப் பேசாதீங்க..!நடிகை ரம்யா பாண்டியன் ஓபன்டாக்..!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்த நடிகையாக ரம்யா பாண்டியன் விளங்குகின்றார். தனது நடிப்பு மற்றும் நேர்மையான கருத்துகளால் பிரபல்யமடைந்த இவர், சமீபத்தில் தனது திருமணத்தை மையமாக கொண்ட சில தவறான செய்திகளால் கவலை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.இணையத்தில் “ரம்யா பாண்டியன் தனது கணவரிடமிருந்து வரதட்சணை பெற்றே திருமணம் செய்துகொண்டார்” என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு பதிலளித்த , ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மனதளவில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.வீடியோவில் ரம்யா கூறியதாவது, “நான் பள்ளிக் காலம் முதல் என் செலவுகளை என் பெற்றோரிடம் கேட்காமல் பார்த்துக் கொண்டு தான் வந்தனான். சினிமாவிற்கு வந்த பிறகு, நடுவில் ஒரு சில ஆண்டுகள் மட்டும் ஓய்வு எடுத்தேன். அதைவிட்டுப் பார்க்கும் போது, இன்று வரை என் செலவுகள், என் வீட்டு செலவுகள் அனைத்தும் எனது கையில் இருந்து தான் போகின்றன.” எனக் கூறியிருந்தார்.மேலும் “திருமணத்திலும், எனது பங்கான செலவுகளை நான் ஏற்றுக் கொண்டேன். இது என் விருப்பம். இருவரும் இணைந்து ஒரு வாழ்க்கையை தொடக்கிறோம் என்பதில் சமநிலை முக்கியம். அப்படி இருக்கும் போது நான் கணவரிடம் இருந்து வரதட்சணை வாங்கினேன் என்று கூறுவது நியாயம் இல்லை.” எனவும் தெரிவித்திருந்தார்.