Connect with us

சினிமா

சூர்யா ஜாதகத்துல அது இருந்துச்சு சொன்னான்..பைத்தியக்கார்னு திட்டினேன்!! சிவக்குமார்

Published

on

Loading

சூர்யா ஜாதகத்துல அது இருந்துச்சு சொன்னான்..பைத்தியக்கார்னு திட்டினேன்!! சிவக்குமார்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே 1 ஆம்தேதி உலகெங்கும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டான நிலையில், ரெட்ரோ படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார், தன் மகன் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில், முதன்முறையாக சிக்ஸ்பேக் வைத்து நடித்த நடிகர் சூர்யா தான் என்றும் அவருக்குப் பின் பல நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்தார்கள். ஆனால் அது தவறு என்றும் அதன்பின் அறிவுரை வழங்கியதும் சூர்யா தான். சூர்யாவுக்கு முதலில் சினிமாமீது நாட்டமில்லை, அவர் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.ஒருமுறை என் நண்பர் வீட்டுக்கு வந்தார், அவர் ஒரு ஜோசியர். சூர்யா மற்றும் கார்த்தியின் ஜாதகத்தை பார்த்தார், அப்போது சூர்யா ஜாதகத்தை பார்த்தவர், இவர் சினிமாவில் கலக்குவார் என்றார்.இயக்குநராக ஆவாரா? அல்லது கேமராமேன் ஆவாரா? என்று நன் கேட்டேன். இல்லை முகத்தை வைத்து பார்க்கும் வேலை. அப்போ நடிகனா? என்றதற்கு ஆம் என்று கூறினார். லூசாய்யா நீ அவனுக்கு அதுல கொஞ்சம் கூட இஷ்டமே இல்லை என்று சொன்னேன்.பின் ஒருமுறை வசந்த்-ஐ விமானநிலையத்தில் சூர்யாவை சந்தித்தபோது போட்டோ டெஸ்ட் பண்ணனும் என்றார். டெஸ்ட் பண்ணிட்டு வேண்டாம்னு சொன்னா மனசு கஷ்டமாகும், இப்பவே நோ சொல்லிடுங்க என்றேன். 200 சதவீதம் நம்பிக்கை இருக்கு, சூர்யா நல்லா பண்ணுவாருன்னு நேருக்கு நேர் படத்துல நடிக்க வச்சாரு.அதன்பின் ஒவ்வொரு இயக்குநரும் சூர்யாவை செதுக்கி இன்றைக்கு இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறாங்க, அத்தனை பேருக்கும் நன்று என்று சிவக்குமார் பேசியுள்ளார். தந்தை இப்படி பேசியதை பார்த்த சூர்யா கண்ணீரும் கண்கலங்கியதை பார்த்த ரசிகர்களை எமோஷ்னலாக்கியது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன