Connect with us

இந்தியா

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை

Published

on

Pondy bomb threat

Loading

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை

புதுச்சேரி முதலமைச்சர் வீடு உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி, புதுச்சேரி முதலமைச்சர் வீடு, கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு உணவகம் உள்ளிட்ட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில், வெடிகுண்டு இருப்பதாக அனுப்பப்பட்ட இ-மெயில் வதந்தி எனக் கண்டறியப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன