இந்தியா
புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை
புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை
புதுச்சேரி முதலமைச்சர் வீடு உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி, புதுச்சேரி முதலமைச்சர் வீடு, கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு உணவகம் உள்ளிட்ட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில், வெடிகுண்டு இருப்பதாக அனுப்பப்பட்ட இ-மெயில் வதந்தி எனக் கண்டறியப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.