Connect with us

இலங்கை

யாழில் இளைஞன் ஒருவரால் மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்

Published

on

Loading

யாழில் இளைஞன் ஒருவரால் மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்

  யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்றையதினம் (20) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

இரண்டு வயோதிப பெண்கள் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
அவர்களின் ஒருவர் ஈஸ்டர் ஆராதனைக்காக இன்று காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் 20 வயதான, அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளார்.

குறித்த வயோதிப பெண் இளைஞனை கண்டவேளை கொட்டன் ஒன்றினால் மூதாட்டியை தாக்கி கொலை இளைஞன் செய்துள்ளார்.

Advertisement

தேவாலயத்திற்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டிற்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார்   இளைஞனை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன