இலங்கை
அரச சேவையில் இணைக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்

அரச சேவையில் இணைக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்
31 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் நகர அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் மூலம் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள். அதேவேளை 2 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.