இலங்கை
இலங்கையில் வீட்டில் கஞ்சா வளர்த்த மருத்துவர்

இலங்கையில் வீட்டில் கஞ்சா வளர்த்த மருத்துவர்
வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவெல, கொஸ்லந்த பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரே இவ்வாரு கைதாகியுள்ளார்.
பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இது நடந்தது.
மருத்துவரின் வீட்டில் சுமார் 4 அடி உயரமுள்ள 14 கஞ்சா மரங்கள் அங்கு காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மருத்துவர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.