இலங்கை
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில், குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டன.
தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொதுச் சுடர், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் ஏனைய தேவாலய பங்குத் தந்தைகள், அருட்தந்தையர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.