இலங்கை
கண்டி நகர எல்லைக்குள் 820 தன்சல்கள்!

கண்டி நகர எல்லைக்குள் 820 தன்சல்கள்!
கண்டி நகர எல்லைக்குள் மொத்தம் 820 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் தலைமை நகராட்சி வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜெயசிங்க தெரிவித்தார்.
புனித தந்த சின்னத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தன்சல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஜெயசிங்க கூறினார்.
நேற்று இரவு, பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக கண்டி மாவட்ட செயலகம், ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் கண்டி நாத ஆலயம் ஆகியவற்றால் தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் பல்வேறு நன்கொடையாளர்களின் நன்கொடைகள் மூலம் உணவுப் பொதிகளை விநியோகிக்க முடிந்தது.
அதொடு இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் உணவு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த கூறினார்.
மேலும் கண்டி ஏரி வட்ட வீதியில் இரவு தங்கியிருந்த பக்தர்களுக்கு மாவட்ட செயலாளரின் தலைமையில் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.