இலங்கை
சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
சாமர சம்பத் தசநாயக்க நேற்றுக் காலை பதுளை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்கப் பதவி வகித்தபோது, பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அந்தப் பணத்தைத் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் சாமர சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.