சினிமா
சிவாஜிகணேசனின் அன்னை இல்லத்திற்கு கிடைத்த விடிவுகாலம்..!நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

சிவாஜிகணேசனின் அன்னை இல்லத்திற்கு கிடைத்த விடிவுகாலம்..!நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
தமிழ்த்திரை உலகத்தின் பெரும் மகுடம் எனப் போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வரலாற்றுச் சுவடுகளை ஏந்தி நிற்கும் ‘அன்னை இல்லம்’ மீதான ஜப்தி உத்தரவு தற்போது நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை டி.நகர் பகுதியில் உள்ள ‘அன்னை இல்லம்’ நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடு மட்டுமல்ல, அவருடைய சினிமா வரலாற்றின் அடையாளமாகவும் இருந்தது. கடந்த சில மாதங்களாக இந்த வீடு தொடர்பான கடன் பிரச்சனைகள் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, ரூ.9 கோடி கடனைத் தீர்க்க முடியாமல் போனதற்காக அந்த வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டிருந்தது.சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்யப்படலாம் என உத்தரவு பிறப்பித்திருந்ததால் ரசிகர்களும், திரையுலகமும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். நடிகர் சிவாஜி கணேசனின் மகனும், முன்னணி நடிகருமான பிரபு, இந்த வீட்டை காப்பாற்ற பல நாட்களாக சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த வழக்கில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது நடிகர் பிரபுவின் சகோதரனாகிய ராம்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம். அதில், “சிவாஜி கணேசனின் வீடு என்பது அவருடைய தனிப்பட்ட சொத்து. அதில் துஷ்யந்துக்கு உரிமை கிடையாது,” என உரிமை மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது ஒரு முக்கிய ஆவணமாக மாறி, கடந்த காலமாக ஏற்பட்ட உரிமை குழப்பங்களை தெளிவுபடுத்தியது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஜப்தி உத்தரவை ரத்து செய்யப்பட்டுள்ளது.