வணிகம்
தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா? அப்போ இந்த டிப்ஸை அவசியம் ஃபாலோ பண்ணுங்க

தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா? அப்போ இந்த டிப்ஸை அவசியம் ஃபாலோ பண்ணுங்க
நம்முடைய தேவைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தங்க நகைகளை வாங்கிக் கொள்வதற்கு எந்த விதமான வழிமுறையும் கிடையாது. ஆனால், எதிர்காலத்திற்காக தங்கத்தை ஒரு முதலீடாக பார்ப்பவர்கள் தற்போது கணிசமான அளவு உயர்ந்துள்ளனர்.அந்த வகையில், முதலீட்டிற்காக தங்கத்தை வாங்குவதற்கு சில வழிமுறைகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். தங்கத்தை முதலீடாக வாங்குவதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றில் நமது பொருளாதாரத்திற்கு ஏற்றதை மதிப்பீடு செய்து வாங்கலாம்.அரசு சார்பாக கோல்டு பாண்டுகள் வெளியிடப்படும். இது போன்ற பாண்டுகளில் நாம் முதலீடு செய்யலாம். குறிப்பாக, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றதாக இவை இருக்கும். உதாரணமாக, ஒருவருக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர், 8 ஆண்டுகள் முதிர்வு என்ற அடிப்படையில் இரண்டரை சதவீதம் அதிகமான வட்டி கிடைக்கும் கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்யலாம்.இதன் மூலம் முதிர்வுத் தொகையாக கிடைக்கும் பணத்திற்கு வருமான வரிவிலக்கு கிடைக்கிறது. எனினும், தங்கத்தின் விலை தற்போது புதிய உச்சத்தை எட்டி வருவதால், இவற்றை அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் சில வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த கோல்டு பாண்டுகள் வெளியிடப்படும் போது, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.இரண்டாவதாக மற்றொரு முதலீடு திட்டம் இருக்கிறது. சிலர் தங்கள் விருப்பப்படி தங்கத்தை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும், செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற பிரச்சனைகள் இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். தங்கத்தின் தரம், மதிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் எந்த விதமான சமரசமும் இருக்கக் கூடாது என்று கருதுவார்கள்.இத்தகைய கேள்விகளின் அடிப்படையில் எலக்ட்ரானிக் கோல்டு என்ற முறை இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது, டிமேட் கணக்குகளில் பங்குகளை வாங்கி வைத்திருப்பதை போன்று இ.டி.எஃப்-களாக தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். இதனை ஆங்கிலத்தில் Exchange Traded Fund என்று அழைப்பார்கள். இது மியூச்சுவல் ஃபண்டின் ஒரு முகமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, கோல்டு இ.டி.எஃப்-ல் 12 திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதலீடு செய்யலாம். தங்கத்தின் விலை நாள்தோறும் அதிகரித்து வருவதால் அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய லாபத்தை அதிகரிக்க முடியும். ஆனால், இதில் இருக்கும் லாபத்தின் அடிப்படை சதவீதம் தொடர்பாக ஆராய்ந்து முதலீடு செய்வது அவசியம்.நன்றி – PuthiyathalaimuraiTVதங்கத்தை ஈஸியாக வாங்கணுமா? இதை Try பண்ணுங்க. #GOLD pic.twitter.com/NL1ynZzmRv