சினிமா
நெப்போலியன் சார்பில் காவல் நிலையத்தில் மருத்துவர் திடீர் புகார்! என்ன ஆனது?

நெப்போலியன் சார்பில் காவல் நிலையத்தில் மருத்துவர் திடீர் புகார்! என்ன ஆனது?
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கலந்துகொண்டனர்.திருமணம் முடிந்த பின் மொத்த குடும்பமும் பல்வேறு நாடுகளுக்கு கப்பல் மூலமாக சென்று வருவது.பண்டிகை அனைத்தையும் ஒன்றாக கொண்டாடி வருவது என்று மிகவும் மகிழ்ச்சியாக இந்த குடும்பம் கொண்டாடி அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை நான் அறிவோம்.இந்நிலையில் தற்போது தனுஷ் உடல் நிலை குறித்தும், அவரது மனைவி அக்ஷயா குறித்தும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.தற்போது இது தொடர்பாக, தனுஷிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் டேனியல் ராஜா, நெப்போலியன் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.அதில், ” தனுஷின் உடல்நிலை பற்றியும், அவரது மனைவி அக்ஷயா பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.