Connect with us

இலங்கை

பிள்ளையானால் சிறையில் வாடும் தாயை விடுவிக்க பிள்ளைகள் கோரிக்கை!

Published

on

Loading

பிள்ளையானால் சிறையில் வாடும் தாயை விடுவிக்க பிள்ளைகள் கோரிக்கை!

   அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (21) தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டே கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முறண்பாடுகளால் தனது தயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார்.

எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நாம் நான்கு சகோதரர்களும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றோம் .

இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார் குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார்.

Advertisement

எனவே எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமானமான நடவடிக்கையாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன