இந்தியா
‘மதத்தால் அல்ல, பங்களிப்புகளால் தீர்மானிக்கப்பட வேண்டும்’: பா.ஜ.க எம்.பி.,யின் ‘முஸ்லிம் ஆணையர்’ கருத்துக்கு எஸ்.ஒய்.குரேஷி பதில்

‘மதத்தால் அல்ல, பங்களிப்புகளால் தீர்மானிக்கப்பட வேண்டும்’: பா.ஜ.க எம்.பி.,யின் ‘முஸ்லிம் ஆணையர்’ கருத்துக்கு எஸ்.ஒய்.குரேஷி பதில்
பா.ஜ.க எம்பி நிஷிகாந்த் துபே தன்னை “முஸ்லீம் ஆணையர்” என்று விமர்சித்த கருத்துகளுக்கு பதிலளித்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) எஸ்.ஒய் குரேஷி திங்களன்று, தனிநபர்கள் அவர்களின் மத அடையாளங்களால் அல்ல, அவர்களின் பங்களிப்புகளால் வரையறுக்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்ஞாயிற்றுக்கிழமை காலை, நாட்டில் “கிரி யுத்தங்களுக்கு” (உள்நாட்டுப் போர்கள்) காரணம் இந்திய தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கன்னா தான் என்று பா.ஜ.க எம்பி நிஷிகாந்த் துபே கூறிய நிலையில், அவரது கருத்துக்களிலிருந்து அவரது கட்சி விலகி இருந்தது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, வக்ஃப் சட்டத்தை விமர்சித்ததற்காக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒ.எஸ்.குரேஷியை பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே தாக்கி, குரைஷியை “முஸ்லீம் ஆணையர்” என்று முத்திரை குத்தினார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் மதத்தை குறிவைத்து நிஷிகாந்த் துபே கூறிய கருத்து, “மதப் போர்களுக்கு” உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி தான் காரணம் என அவர் குற்றம் சாட்டிய ஒரு நாள் கழித்து வந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய குரேஷி, “நமது அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது… யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்” என்றார். வக்ஃப் சட்டம் குறித்த தனது கூற்றில் உறுதியாக உள்ளாரா என்று கேட்டதற்கு, “நிச்சயமாக, நான் உறுதியாக இருக்கிறேன்” என்று குரேஷி கூறினார். குரேஷி ஜூலை 2010 முதல் ஜூன் 2012 வரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.ஏப்ரல் 17 அன்று, குரேஷி தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியிருந்தார்: “வக்ஃப் சட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி முஸ்லிம் நிலங்களை அபகரிக்கும் அரசாங்கத்தின் அப்பட்டமான தீய திட்டம். உச்ச நீதிமன்றம் அதை வெளிப்படையாக அறிவிக்கும் என்று நான் நம்புகிறேன். தீங்கிழைக்கும் பிரச்சார இயந்திரத்தால் தவறான தகவல் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளது.”திங்களன்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய குரேஷி, “நான் தேர்தல் ஆணையர் என்ற அரசியலமைப்பு பதவியில் என்னால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்றினேன், ஐ.ஏ.எஸ் அதிகாரியிலிருந்து நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கையைக் கொண்டிருந்தேன். இந்தியாவில் ஒரு தனிநபர் அவர்களின் மத அடையாளங்களால் அல்லாமல், அவர்களின் திறமைகள் மற்றும் பங்களிப்புகளால் வரையறுக்கப்படுவார் என்ற கருத்தை நான் நம்புகிறேன்” என்று கூறினார்.”ஆனால், சிலருக்கு, மத அடையாளங்கள் தங்கள் வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியா அதன் அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளுக்காக எப்போதும் எழுந்து நின்று போராடும்,” என்று குரேஷி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ