பொழுதுபோக்கு
மனைவியை வேவு பார்க்கும் கணவன்: கர்ப்பமான தங்கைக்கு ஆபத்து; அண்ணா காப்பாற்றுவாரா?

மனைவியை வேவு பார்க்கும் கணவன்: கர்ப்பமான தங்கைக்கு ஆபத்து; அண்ணா காப்பாற்றுவாரா?
கார்த்தியின் கணவன் என அறிமுகம் செய்யும் ரேவதி.. திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி தன்னுடைய தோழியை ரிசப்ஷனில் பார்த்து ஷாக்கான நிலையில் இன்று, ரேவதியின் தோழி அவளை பார்த்து விடுகிறாள். பிறகு தனது கணவரை அறிமுகம் செய்து வைக்கிறாள். மேலும் உனக்கே இப்போ கல்யாண ஆச்சு உன் கணவர் எங்கே என்று கேட்க ரேவதி கார்த்தியை கூப்பிட்டு தனது கணவன் என அறிமுகம் செய்து வைக்கிறாள்.அதன் பிறகு ரேவதியின் தோழி பார்த்து ரொம்ப நாளாச்சு வெளியே எங்கேயாவது போலாமா என்று கேட்கிறாள். இந்த சமயத்தில் கார்த்திக் இங்கு இல்லாத நிலையில் ரேவதி ஏன் கணவருக்கு வேலை இருக்கு என்று சொல்லி விடுகிறாள். அதன் பிறகு கார்த்திக் அங்கு வர ரேவதி நேரடியாக கார்த்தியிடம் வெளியே போலாமா? உங்களுக்கு வேலை இருக்கா என்று கேட்க கார்த்திக் போலாமே நான் ப்ரீ தான் என்று சொல்லி விடுகிறான். இதனால் ரேவதி கார்த்தியிடம் ஏன் வேலை இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே என்று கோபப்படுகிறாள்.அதன் பிறகு இவர்கள் எல்லோரும் வெளியே சாப்பிட வருகின்றனர். அப்போது நீங்க ரெண்டு பேரும் எங்க மீட் பண்ணீங்க என்று கேள்வி கேட்க கார்த்தி நான் உங்க வீட்டில டிரைவரா வேலை பார்த்தேன் என்று சொல்கிறான். அதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதிக்காக சொட்டர் ஒன்றை வாங்கி கொடுக்க ரேவதி அவர்களுக்கு முன்னால் மறுக்க முடியாமல் வாங்கி கொள்கிறாள். இந்த சமயத்தில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையின் மீது கார் மோதி விட கார்த்திக் ஓடிப் போய் அந்த குழந்தைக்கு முதல் உதவி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பலிக்க தொடங்கிய பாக்கியத்தின் கனவு.. இசக்கிக்கு ஆபத்து – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியல் இன் கடந்த வெள்ளிக்கிழமையை எபிசோடில் போலீஸ் வேலைக்கு சேர போன வீராவை வைஜெயந்தி சதி செய்து காக்க வைத்த நிலையில் இன்று, பாக்கியம் இசக்கி கீழே விழுந்து அடிபடுவது போல கனவு கண்டு அல்லது எழுந்த நிலையில் அதே சிந்தனையில் இருக்கிறாள். அதன் பிறகு தூங்கி எழுந்த சௌந்தரபாண்டி காபி போட்டு கொடுக்க சொல்ல பாக்கியம் காஃபி எல்லாம் ஒன்னும் கிடையாது நான் போய் இசக்கியை பாத்துட்டு வந்துடுறேன் என்று கிளம்ப சௌந்தர பாண்டி அவ அந்த வீட்டில் இருந்தா எப்படி நல்லா இருப்பா என ஏற்றி விடுகிறார்.பாக்கியத்தின் மூலமாக இசக்கி இந்த வீட்டுக்கு வரவைத்து விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். பிறகு பாக்கியம் மற்றும் சிவபாலன் என இருவரும் கிளம்பி சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். இங்கே இசக்கி ஷேர் மீது ஏறி துணி காய போட வழுக்கு கீழே விழுந்து அடிபடுகிறது. இந்த சமயத்தில் வந்த பாக்கியம் மற்றும் சிவபாலன் இருவரும் இசக்கியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அஞ்சலியை வேவு பார்க்கத் தொடங்கும் மகேஷ்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கவின் பற்றி தெரிந்து கொண்ட மகேஷ் யார் அவன் என அவனை பார்க்க வேண்டும் என்று டென்ஷனான நிலையில் இன்று, மகேஷ் யார் அந்த கவின் அவனை எப்படியாச்சு தேடி கண்டு பிடிக்கணும் என யோசிக்கிறான். இந்த சமயத்தில் அவன் கண் முன் தோன்றும் மனசாட்சிகள் அஞ்சலிக்கு உன் மேல லவ் கிடையாது. உன்னை விட அவளுக்கு கவினை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதும் மகேஷ் இன்னும் டென்ஷன் ஆகிறான்.இன்னொரு பக்கம் துளசி பஸ்ஸுக்காக வெயிட் செய்து கொண்டிருக்க அந்த வழியாக வந்த வெற்றி என்ன மேடம் பஸ் வரலையா நான் வேணும்னா டிராப் பண்ணவா என்று கேட்க துளசி அவனை திட்டி விடுகிறாள். அதன் பிறகு மகேஷ் தனது பிஏவை கூப்பிட்டு கவினின் போன் நம்பரை கொடுத்து இந்த போன் நம்பருக்கு குறித்து விசாரிக்க சொல்கிறான். அந்த போனுக்கு எங்க இருந்து மெசேஜ் வந்தது என்ன என்ற விவரங்களை சேகரிக்க சொல்கிறான்.அடுத்து கவின் மற்றும் அவரது அப்பா நடிகர் மாற்றம் பிடித்த அறிமுகம் செய்யப்படுகிறது. கவின் அப்பா இனிமேலாவது ஒழுங்கா படி என்று சொல்ல கவின் இனிமே ஒழுங்கா இருப்பேன் என வாக்கு கொடுக்கிறான். அதைத்தொடர்ந்து கவினின் முறை பெண் பிரீத்தி என்பவர் அறிமுகம் ஆகிறார். கவின் மீது காதல் கொண்ட பிரீத்தி அவன் அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு எனக்கு படிப்பு முடிஞ்சிடுச்சு இனிமே சந்தோஷமாக இருக்க போறேன் என்று சொல்கிறாள்.கவினின் அம்மா அவளுக்கு சாப்பாடு ஊட்ட பிரீத்தி கவின் சாப்பிட்டாதான் சாப்பிடுவேன் என அடம் பிடிக்கிறாள். அடுத்ததாக இங்கே கவின் நம்பரை ட்ரேஸ் செய்து தகவல்களை எடுத்த மகேஷ் பி.ஏ அவனுக்கு ஒரு நம்பர் இருந்தது அதிகமாக மெசேஜ் போயிருப்பதாக சொல்லி அந்த நம்பரை கொடுக்க அது அஞ்சலியின் நம்பர் எனக்கு தெரிந்து மகேஷ் கடுப்பாகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.