இலங்கை
யாழ்- நாவாந்துறை வீதியில் பொறுப்பற்றவர்களல் கொட்டப்பட்ட கழிவுகள்!

யாழ்- நாவாந்துறை வீதியில் பொறுப்பற்றவர்களல் கொட்டப்பட்ட கழிவுகள்!
யாழ்- நாவாந்துறை வீதியில் பொறுபற்றவர்களல் கொட்டப்பட்ட மருந்து போதல்கள் வீதியில் போடப்பட்டுள்ளமை குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
நவாலியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில், மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் பல போத்தல்கள், உடைந்த நிலையில் வீதியில் கொட்டப்பட்டதால் வீதியா பயணிப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
உடைந்த கண்ணாடிப் போத்தல்கள் வீதியில் சென்ற பல வாகனங்களின் ரயர்களை உடைந்த போத்தல்கள் சேதப்படுத்தியதால் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருத்தனர்.
இதனையடுத்து வீதியால் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அகற்றியதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.