இலங்கை
உர மானியத்துக்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிப்பு

உர மானியத்துக்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிப்பு
சிறுபோகச் செய்கைக்கான உர மானியங்கள் இன்றும், நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம், தலா 2 ஏக்கருக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.
சிறுபோகச் செய்கைக்கான உர மானியம் வழங்குவதற்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.