
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 22/04/2025 | Edited on 22/04/2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை தவிர்த்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ஆமிர் கானுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சமூக வலைதளத்தில் இருந்து சிறிது பிரேக் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கூலி பட புரொமோஷன்ஸ் வரை அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் சிறிய பிரேக் எடுத்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் இருந்து அடுத்தடுத்து டீசர், ட்ரைலர், பாடல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் புரொமோஷன் படம் வெளியாவதற்கு இரண்டு மாதம் முன்னாடி ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Hey guys!
I’m taking a small break from all the social media platforms until #Coolie’s promotions
With Love,
Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 22, 2025
<!–
–>
<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
–>