இலங்கை
தேசபந்து தென்னக்கோனை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு

தேசபந்து தென்னக்கோனை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட இருவரை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் என்று மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றால் கடந்த 10ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும்போது அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை் விடுத்திருந்தார்.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்ததுடன், சந்தேகநபர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து 20 நாள்கள் தலைமறைவாக இருந்தபோது விசேட பாதுகாப்பிலிருந்தாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.