இலங்கை
மதுபோதையில் சிக்கிய வேட்பாளர் ; பொலிஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

மதுபோதையில் சிக்கிய வேட்பாளர் ; பொலிஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை
மதுபோதையில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற அம்பகமுவ பிரதேச சபை வேட்பாளர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபருக்கு எதிராக கினிகத்ஹேன பொலிஸாரால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அதிக மதுபோதையில் தனது முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றபோது, கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் புதன்கிழமை (23) அன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதால் வழக்கு ஜூன் மாதம் இரண்டாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.