சினிமா
42 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் சிம்பு.. காரணம் இதுதானா

42 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் சிம்பு.. காரணம் இதுதானா
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து பல கிசுகிசுக்கள் இதுவரை வந்துள்ளன. பிரபல நடிகையை அவர் காதலிப்பதாகவும், இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் என்றல்லாம் பல செய்திகள் வந்துள்ளது.ஆனால், அவை யாவும் அதிகாரப்பூர்வமானது இல்லை. நடிகை ஹன்சிகாவுடன் அவருக்கு திருமணம் நடக்கவிருந்த பின் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஏன் இதுவரை அவர் திருமணம் செய்யவில்லை என பலரும் கேட்டு வருகிறார்கள்.இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.அவர் கூறியதாவது “திருமணம் என்பது தப்பு இல்லை, சரியான நபரை தேர்ந்தெடுப்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை மிகவும் குறைந்துவிட்டது. நீ இல்லனா வேறொருவர் என்கிற மனநிலையில் ஆணும் பெண்ணும் இருப்பதாக நினைக்கிறன். அப்படி இருக்க கூடாது. உங்களுக்கான சரியான நேரம் வரும்போது, உங்களுக்கான சரியான நபர் கிடைக்கபோது திருமணம் மகிழ்ச்சியாக நடக்கும்” என கூறினார்.ஆகையால் இதுதான் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க காரணமா என ரசிகர்களிடையே பேசப்படுகிறது.