இலங்கை
பரிசு பொருட்கள் கொடுத்து NPP க்கு வாக்கு சேகரிக்கும் சனசமூக நிலையம்!

பரிசு பொருட்கள் கொடுத்து NPP க்கு வாக்கு சேகரிக்கும் சனசமூக நிலையம்!
மட்டக்களப்பு செங்கலடி ஐயன்கேணி பகுதியில் NPP கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி பணம் உட்பட பல பரிசுப் பொருட்களை சனசமூக நிலையம் ஊடாக விநியோகம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் உள்ள NPP அமைப்பாளர் மற்றும் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் இணைந்து புத்தாண்டு பரிசு பொருட்களுடன் இரண்டாயிரம் ரூபாய் பணப்பரிசுகளும் வழங்கியதோடு தேசிய மக்கள் சக்திக்கு NPP வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் NPP கட்சிக்கு வாக்களிக்க கோரி தென்னங் கன்றுகள் வழங்கப்படுவதோடு, வீதிகளை அளந்து காப்பற் வீதிகள் போடப் போவதாக கூட்டம் நடத்துகின்றனர்.
உதவித் திட்டங்களை வழங்கப் போவதாக கூறி சில விண்ணப்ப படிவங்களை நிரப்புமாறு கோரி விநியோகம் செய்கின்றனர்., வீதி விளக்குகளை போட்டு படம் எடுத்துவிட்டு மீண்டும் அதே வீதிவிளக்குகளை கழற்றி அடுத்த வீதிக்கு போடுகின்றனர்.
இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை ஏமாற்றி பறிப்பதற்கா தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் NPP கட்சிக்கு ஆதரவாக சில அரச திணைக்களங்களும், அரச திணைக்களங்களுக்கு கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களும், பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் ஆணையாளருக்கு பல தடவைகள் புகார் அளித்தும் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் NPP கட்சி அரச வளங்களையும் அரச திணைக்களங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளையும் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிக பகிரங்கமாக ஈடுபடுத்தி வருகின்றனர்.