இலங்கை
பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து

பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து
பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து அநுராதபுரம், அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் அமர்ந்திருந்த பயணியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.