இலங்கை
பொய் கூறிய நாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி

பொய் கூறிய நாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் X கணக்கில் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றிய தினுக் கொழும்பகே,
முந்தைய ஜனாதிபதிகள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை இலவசமாக அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
“இது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் இலவசமாக வழங்கப்படும் சேவையாகும்,” என அவர் தனது X கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி வெளிப்படுத்தியதை அடுத்து, அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.