இலங்கை
யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு
நிமோனியா காய்ச்சல் காரணமாக குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி – தம்பாலை பகுதியைச் சேர்ந்த, அப்புத்துரை கருணாகரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் கடந்த 21ஆம் திகதி சிகிச்சைபெற்ற அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில், நிமோனியா காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.