Connect with us

சினிமா

அக்ஷய் குமாரின் பெயரை தவறாக பயன்படுத்தும் மோசடி கும்பல்.!மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை..!

Published

on

Loading

அக்ஷய் குமாரின் பெயரை தவறாக பயன்படுத்தும் மோசடி கும்பல்.!மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை..!

இணையத்தில் வேகமாக பரவி வரும் ஒரு புதிய வதந்தி இந்திய மக்களை குழப்பத்துக்குள்ளாக்கி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக பணம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள் என்றும், இந்த நடவடிக்கைக்கு நடிகர் அக்ஷய் குமாரின் பெயர் தொடர்பு கொண்டு பயன்படுத்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியானது. எனினும் இந்த தகவல்கள் அனைத்தும் முழுமையாக தவறானவை என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை தெளிவாக அறிவித்துள்ளது.சமீபகாலமாக பல சமூக ஊடகக் குழுக்களில் “இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தங்களால் முடிந்தளவு நிதி வழங்குங்கள்” எனும் பெயரில் பரப்பப்பட்ட காணொளி மற்றும் செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டன. இதில், அக்ஷய் குமார் போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு மக்களை நம்ப வைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.இந்த செய்தியில், “நாட்டின் பாதுகாப்புக்கு ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும். உங்கள் பங்களிப்பால் நம் ராணுவம் மேலும் வலிமை பெறும். இந்த முயற்சியை நடிகர் அக்ஷய் குமார் ஆதரிக்கிறார்” என்ற போலி தகவல்களும் இடம் பெற்றுள்ளன.இந்த வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கிய உடனே, மத்திய தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை துரிதமாக செயல்பட்டு, இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் “இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்காக அரசால் பொதுமக்களிடமிருந்து நேரடியாக நிதி சேகரிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை. அக்ஷய் குமார் அவர்களின் பெயர் இதில் பயன்படுத்தப்படுவது பொய்யானது. பொதுமக்கள் இத்தகைய போலி செய்திகளை நம்ப வேண்டாம். எந்த சந்தேகமும் இருந்தால் அதிகார பூர்வ வலைத்தளங்களையும், அரசு மூலம் வெளியிடப்படும் அறிவிப்புக்களையும் மட்டுமே நம்ப வேண்டும்.” எனவும் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன