இலங்கை
துவிச்சக்கரவண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

துவிச்சக்கரவண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு – கொழும்பு வீதியின் சீதுவ நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் குறிக்கே பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கரவண்டி செலுத்துனர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் 50 வயதுடைய நீர்கொழும்பு, தலாதூவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடரபில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.