சினிமா
GBU படத்தை விட “மண்டாடி” படத்திலேயே சம்பவம் செய்திருக்கேன்..! ஜி.வி.பிரகாஷ் ஓபன்டாக்!

GBU படத்தை விட “மண்டாடி” படத்திலேயே சம்பவம் செய்திருக்கேன்..! ஜி.வி.பிரகாஷ் ஓபன்டாக்!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், திறமையான நடிகராகவும் தனித்த இடத்தை பிடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் தற்போது தனது இசைப் பயணத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் “மண்டாடி” படத்தில் சிறப்பாகத் தான் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜி.வி.பிரகாஷ் பேசும் போது , “நான் ‘குட் பேட் அக்லி’ படத்துக்காக முழு பாடல் இசை மற்றும் பின்னணி இசையையும் 30 நாட்களில் முடித்தேன். ஆனால் ‘மண்டாடி’ படத்திற்கான பாடலை ரெண்டு நாளில முடிக்கச் சொல்லியிருந்தாங்க. இது எனக்கு பெரிய சவாலாக இருந்தது,” என்று சிரித்தபடி தெரிவித்திருந்தார்.”மண்டாடி” திரைப்படம் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வருகின்றது. கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரம்பரியமும், வாழ்க்கைப் போராட்டங்களும் நிறைந்து காணப்படுகின்றன.ஜி.வி.பிரகாஷ் மேலும் கூறுகையில், “இப்போது தமிழ் சினிமா வேகம் விட்டு போயிடுச்சு. நாம இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னாடி மாதிரி சிறப்பாக வேலை செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதை மற்றும் இசை தேவைப்படுகிறது. அதுக்காக நாம ரெடியா இருக்கணும். ‘மண்டாடி’ என்னால ஒரு பெரிய பாடமாக மாறிவிட்டது,” என்றார்.