சினிமா
உலகளவில் 100 கோடியை தாண்டி வசூலித்த சூர்யாவின் ரெட்ரோ..

உலகளவில் 100 கோடியை தாண்டி வசூலித்த சூர்யாவின் ரெட்ரோ..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ ” திரைப்படம் மே மாதம் முதலாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகின்றது . இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளதுடன் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.‘கங்குவா’ படத்திற்கு பிறகு சூர்யாவின் அடுத்த மிகப்பெரிய ரிலீஸாக ‘ரெட்ரோ’ விளங்கியது. குறிப்பாக, ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த அளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதிக்க முடியாததால், இந்த படம் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகவே இருந்தது.இந்த நிலையில் தற்போது உலகளாவிய வசூல் குறித்த அறிவிப்பினை படக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆகும் நிலையில் படம் உலகளவில் 104 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.